கைதுக்கு பயந்து செந்தில் பாலாஜி நெஞ்சுவலி என நாடகமாடுகிறார் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jun 15, 2023, 3:16 PM IST

போக்குவரத்து துறையில் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காத வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் அளித்த பேட்டியில்,  தமிழகத்தில் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் மோசடிகளை பட்டியலிட்டு முன்பே ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சி சார்பில் புகார் வழங்கப்பட்டுள்ளது.  அப்போதே தமிழக முதல்வருக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையே. போக்குவரத்து துறையில் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காத வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படியே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தின் முன் தலைகுனிந்து நிற்கவேண்டி வரும்.  

Tap to resize

Latest Videos

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்

தமிழகத்தில் உள்ள மதுக்கடை பார்களில் போலியான முகவரியை கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளார். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் பேசுவது தவறு.  கைதுக்கு பயந்து நெஞ்சுவலி எனக்கூறி செந்தில் பாலாஜி நாடகமாடுகிறார். முறைகேடாக சம்பாதித்த பலநூறு கோடி ரூபாயை பல்வேறு நாடுகளில் ஹவாலா மூலமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வருகிறது. செந்தில்பாலாஜி நியாயமானவர் என்றால் கைதை சட்டபூர்வமாக சந்திக்க வேண்டும்.

செந்தில்பாலாஜி மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ம் ஆண்டில் அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி மீது குற்றம் சுமத்தி கரூரில் பேசிய ஸ்டாலின் தற்போது அவருக்கு ஆதரவாக இருப்பது எப்படி? திமுகவிற்கு வந்தவுடன் செந்தில்பாலாஜி புனிதராகி விட்டாரா? 

ஐஎப்எஸ் நிதி நிறுவன முறைகேடு; ரூ.550 கோடி வசூல் செய்து கொடுத்த காவல் அதிகாரி கைது

மத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது தமிழக காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு தராதது சரியான புரிதலல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. 2017ல் நீட் தேர்வு அறிமுகமான போது எதிர்த்து திமுக போராடியது. ஆனால் தற்போது நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றதன் மூலம் அதன் நன்மை குறித்து அனைவரும் புரிந்து கொண்டனர். சினிமாவின் மோகம் குறைய துவங்கியதால் மதுவை இலக்காக வைத்து தமிழக மக்களை  அடிமையாக்கி வைக்க திமுக முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

click me!