முழு ஊரடங்கு போடு.. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ்.. நிம்மதி இழந்து தவிக்கும் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 6, 2021, 12:25 PM IST
Highlights

தமிழ்நாட்டில்  மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும், அக்சிஜன், மருந்து பற்றாக் குறையால் உயிரிழக்கும் மக்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 

தமிழ்நாட்டில்  மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும், அக்சிஜன், மருந்து பற்றாக் குறையால் உயிரிழக்கும் மக்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளது, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக நாளை காலை 11 மணிக்க பதிவியேற்க உள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று மக்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கி வருகிறது. இதனால் வெற்றி பெற்றும் அதை கொண்டாட முடியாத சுழலுக்கு தள்ளப்பட்டுள்ள திமுகவுக்கு கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 

அவரசகதியில் என்ன செய்வது என புரியாமல் திமுக தலைமை நிம்மதி இழந்து தவித்து வரும் நிலையில், அரசு உடனே களத்தில் இறங்க வேண்டும் என எதிர்கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் பமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா தொற்றில் இருந்த மக்களை காக்க திமுக அதிவேகமாக செயல்பட வேண்டும் என்றும், உடனே மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. 

திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.  இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்க வேண்டும். மூடு... மூடு... மூடு... தமிழ்நாட்டில்  மதுக்கடைகளை மூடு. காப்பாற்று... காப்பாற்று...காப்பாற்று... கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று என அவர் பதிவிட்டுள்ளார். 
 

click me!