#BREAKING முதல்வராக பதவியேற்க உள்ள எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.. அசத்தும் மு.க.அழகிரி..!

Published : May 06, 2021, 12:19 PM ISTUpdated : May 07, 2021, 01:57 PM IST
#BREAKING முதல்வராக பதவியேற்க உள்ள எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.. அசத்தும் மு.க.அழகிரி..!

சுருக்கம்

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு எளிமையான முறையிலேயே பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய உள்ளதால் பஞ்சாப் விவசாயிகள் முதல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் எனவும் கூறியுள்ளார். 

முன்னதாக மதுரையில் ஆதரவாளர் மத்தியில் பேசிய மு.க.அழகிரி;-  கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது. என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவரால் முதல்வராக நிச்சயமாக முடியாது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!