பெரியார் யார் தெரியுமா..? ஆராயாம எதையும் பேசாதீங்க...ரஜினிக்கு நாராயணசாமி அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Jan 24, 2020, 7:24 AM IST
Highlights

“பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர் தந்தை பெரியார்.  தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்பணித்தவர் பெரியார். துக்ளக் விழாவில் பேசிய அந்த சம்பவம், உண்மையாக நடந்ததா என ஆராய்ந்து ரஜினி பேசி இருக்க வேண்டும்."
 

பெரியார் மற்றும் திக குறித்து பேசிய பேச்சுகளை நடிகர் ரஜினி திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் 1971-ல் பெரியார் தலைமையில் திகவினர் நடத்திய ஊர்வலம்  தொடர்பாக ரஜினி பேசியது சர்ச்சையானது. அந்தப் பேச்சுக்கு ரஜினி வருத்தம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தான் இல்லாததைப் பேசவில்லை என்று ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். 
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர் தந்தை பெரியார்.  தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்பணித்தவர் பெரியார். துக்ளக் விழாவில் பேசிய அந்த சம்பவம், உண்மையாக நடந்ததா என ஆராய்ந்து ரஜினி பேசி இருக்க வேண்டும்.
சில தகவல்களை மட்டுமே வைத்துகொண்டு தந்தை பெரியாரையும் திகவையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்துக்குரியதும்கூட. ரஜினி தன்னுடைய கருத்தைத் திரும்ப பெற்று இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தச் சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பதே அவருக்கு நல்லது.” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

click me!