ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தும் ரஜினி... வேல்முருகன் கடும் அட்டாக்!

By Asianet TamilFirst Published Jan 23, 2020, 10:08 PM IST
Highlights

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ள வேளையில்,  இதை மடைமாற்றம் செய்ய ஆர்.எஸ்.எஸ். கொடுத்த வேலையை ரஜினி தவறான கருத்தை சொல்லி திசை திருப்பி உள்ளார். இதை தமிழ்ச் சமூகம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து இதுவரை ரஜினி கருத்து எதையும் சொல்லவில்லை. 

தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தபோதெல்லாம் குரல் கொடுக்காத நடிகர் ரஜினி, இதில் வாய் திறக்க மறுக்கிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பரோலில் வந்து அருப்புக்கோட்டையில் தன் தாயுடன்  தங்கியுள்ளார். அவரை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 
“கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். பாஜகவுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளு கீரைதான். சஞ்சய்தத் வழக்கில் அவரை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர். 7 தமிழர்களை வைத்து காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் அரசியல் செய்கின்றன. தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தபோதெல்லாம் குரல் கொடுக்காத நடிகர் ரஜினி, இதில் வாய் திறக்க மறுக்கிறார்.


இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ள வேளையில்,  இதை மடைமாற்றம் செய்ய ஆர்.எஸ்.எஸ். கொடுத்த வேலையை ரஜினி தவறான கருத்தை சொல்லி திசை திருப்பி உள்ளார். இதை தமிழ்ச் சமூகம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து இதுவரை ரஜினி கருத்து எதையும் சொல்லவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடக்காத சம்பவத்தை நடந்ததாகக் கூறி தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். கொடுக்கிற அஜெண்டாவைத் தெரியப்படுத்தி இருக்கிறார். பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

click me!