முடக்கப்பட்ட ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் தளம்.. மீட்கும் முயற்சி தோல்வி! சைபர் கிரைம் உதவியை நாடல்.!

By vinoth kumar  |  First Published Jan 17, 2024, 7:51 AM IST

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வருகிறார். இவர் எக்ஸ் வலைதளம் கணக்கை பயன்படுத்தி வருகிறார். இவரது எக்ஸ் தள பக்கத்தை 6.55 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்து வருகிறார். இவர் எக்ஸ் வலைதளம் கணக்கை பயன்படுத்தி வருகிறார். இவரது எக்ஸ் தள பக்கத்தை 6.55 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். தனது அன்றாட நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தமிழிசை பகிர்ந்து வருகிறார். கடைசியாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியை பகிர்ந்திருந்த நிலையில் எக்ஸ் தள பக்கத்தை ஹேக்கர்களால்  ஹேக் செய்துள்ளனர். 

Latest Videos

இதையும் படிங்க;- காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.! எந்தெந்த இடங்களிலும் தெரியுமா?

ஆளுநர் தமிழிசையின் முகப்பு படத்தை ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர். இந்நிலையில், எக்ஸ் தள பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநரின் தமிழிசையின் எக்ஸ் தள பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  என்னது.. ஆளுநர் மனைவி லேடி கவர்னரா? எதுக்கு இப்படியொரு மலிவான அரசியலை செய்றீங்க? கொதிக்கும் வன்னி அரசு.!

click me!