பெண்களுக்கு இலவச கல்வி.. மாணவர்களுக்கு மடிக்கணினி.. அடிச்சு தூக்கும் புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 26, 2021, 1:40 PM IST
Highlights

கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5  தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி"  என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

 பாஜக தேர்தல் அறிக்கை

*  விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு

*  புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்.

*  புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்.

*  சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்படும்.

*  தொழில், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் செயல்பாட்டை உறுதிசெய்ய உயர்மட்ட குழு

*  அனைத்து பஞ்சாலைகளும், கூட்டுறவு மில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

*  அடுத்த 5 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

*  கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

*  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.

*   கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

*   ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும்

*  எந்த ஆன்மிக வழிபாட்டு தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது.

click me!