முதல்வர் ஆவதற்கு ஒரு ராசி வேண்டும் , ஸ்டாலினுக்கு அது இல்லை, முதல்வர் எடப்பாடி தாக்கு

Published : Mar 26, 2021, 01:39 PM IST
முதல்வர் ஆவதற்கு ஒரு ராசி வேண்டும் , ஸ்டாலினுக்கு அது  இல்லை, முதல்வர் எடப்பாடி தாக்கு

சுருக்கம்

கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவர்  முதல்வர் ஆவதற்கு ஒரு  ராசி வேண்டும் , அந்த கொடுப்பினை ஸ்டாலினுக்கு  இல்லை என்று கிண்டலடித்து பேசினார், அத்துடன் சேர்த்து, உழைப்பின் நம்பிக்கை அனைத்தும் ஒருவருக்கு வேண்டும் என்றும், தான் முதல்வராக இருப்பது ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினை தாக்கினார்.

2021 சட்டமன்ற தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரம்  சூடுபிடித்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , கமல் உள்ளிட்ட  தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவர்  முதல்வர் ஆவதற்கு ஒரு  ராசி வேண்டும் , அந்த கொடுப்பினை ஸ்டாலினுக்கு  இல்லை என்று கிண்டலடித்து பேசினார், அத்துடன் சேர்த்து, உழைப்பின் நம்பிக்கை அனைத்தும் ஒருவருக்கு வேண்டும் என்றும், தான் முதல்வராக இருப்பது ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினை தாக்கினார்.

கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பின் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல், போன்றோர் வரும் சூழ்நிலை உருவான போதும், இயற்கை சீற்றங்களான புயல் மற்றும் வெள்ளம் வந்த நேரத்திலும், குறிப்பாக சமீபத்தில் உலகத்தையே  உலுக்கிய  கொரோனா நோய் தொற்றின் போது கூட தனது திறமையின் மூலம் நன்கு சமாளித்தார். 

இந்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் துன்பம் எல்லாம் தனது அதிர்ஷ்டத்தால் தானாக விலகி போவதாக நம்புகின்றனர். ரஜினி அரசியலுக்கு வராதது, சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியது, பாஜகவை கைக்குள் வைத்திருப்பது உள்ளிட்ட விஷயங்களால் முதல்வர் பக்கம் அதிர்ஷ்ட காத்து வீசிக் கொண்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களே கூறுகின்றனர். மேலும், எடப்பாடி முதலமைச்சராக இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கஷ்டமே இல்லையென்றும், வரும் புயல் கூட வராமல் நின்று விடுகிறது என்றும் மக்கள் பேசுகின்றனர். மற்றோரு பக்கம் எதிர்க்கட்சி தலைவருக்கு முதலமைச்சராகும் ராசியே இல்லையென்று அவர் ஜாதக அமைப்பிலே கூறப்பட்டதாக மக்கள் முணுமுணுக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அமித் ஷா கையில் சிக்கிய குடுமி.. லாட்டரி அடிக்கும் புது கட்சி 2 சீட்டு..! கருவிலேயே சிதைந்த முதல்வர் கனவு..!
23ம் தேதி பிரதமருடன் மேடையேறும் டிடிவி தினகரன்..? மா.செ.களுடன் இன்று முக்கிய ஆலோசனை