ஓட்டுக்கு ரூ. 2 ஆயிரம்... வீட்டுக்கு 2 கிராம் தங்கம்... அசத்தும் வேட்பாளர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2021, 1:17 PM IST
Highlights

தொகுதியில் ஓட்டுக்கு 2000 ரூபாய், வீட்டுக்கு இரண்டு கிராம் தங்கம் கொடுத்து நெற்களஞ்சியத்தை பொற்களஞ்சியமாக மாற்றி, வாக்குகளை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற  ஒரத்தநாடு தொகுதியில்அதிமுகவைசேர்ந்த வைத்திலிங்கம்  போட்டியிடுகிறார். காரணம் டெல்லி அரசியல் பிடிக்காததால், மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பும் வகையில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுகிறாராம். ஆனால் வைத்திலிங்கத்தை தோற்கடிக்க பல்வேறு வியூகங்களை பல்வேறு தரப்பினர் வகுத்துள்ளார்களாம்.

கடந்த தேர்தலில் அமமுக இல்லாத நிலையில் வைத்திலிங்கம் தோல்வியை சந்தித்தார். இந்தமுறை வலுவான அமமுக வேட்பாளர் களத்தில் இருப்பதால் கணிசமான ஓட்டை அவர் பிரிப்பார் என்பது உறுதியாகியுள்ளதால் வைத்திலிங்கம் தோல்வி பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தொகுதியில் ஓட்டுக்கு 2000 ரூபாய், வீட்டுக்கு இரண்டு கிராம் தங்கம் கொடுத்து நெற்களஞ்சியத்தை பொற்களஞ்சியமாக மாற்றி, வாக்குகளை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம் என கணக்கு போட்டு வந்த வைத்திலிங்கத்துக்கு பேரிடியாய் வந்து விழுந்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர் நிற்பதால் அவரை வாபஸ் வாங்க கோரி கடைசி நிமிடம் வரை வைத்திலிங்கம் தரப்பினர் கெஞ்சி கூத்தாடியும், பேரம் பேசியும் அவர் கொஞ்சம் கூட மசியவில்லை. இதனால் அந்த வேட்பாளரும் கணிசமான வாக்குகளை பிரிப்பார். அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இருந்தும் அவர்களை வைத்திலிங்கம் பிரசாரத்துக்கு அழைக்காததால் அவர்கள் பிரசாரத்துக்கு செல்வதில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் அவர்களும் வைத்திலிங்கத்துக்கு எதிராக உள்ளடி வேலையில் இறங்கியுள்ளதாகவும் கட்சிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறது. 

click me!