உச்சம் தொடும் கொரோனா... தமிழகத்தில் ஆபத்தான அந்த மூன்று மாவட்டங்கள்..!

Published : Mar 26, 2021, 12:59 PM IST
உச்சம் தொடும் கொரோனா... தமிழகத்தில் ஆபத்தான அந்த மூன்று மாவட்டங்கள்..!

சுருக்கம்

இன்று மட்டும் 1027 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,091-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று மட்டும் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா கொரோனாவின் 2-வது அலையை நோக்கி நகர்வதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் ஒரே நாளில் நேற்று 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 80,63 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,636 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,73,219-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 664 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,641-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 9746 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1027 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,091-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு 162 பேருக்கும், கோவையில், 153 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சையில் 108 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 63 பேருக்கும், திருவாரூர் 52 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுககாரன் ரெண்டு பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான். ஆனா, நாம..? பொதுக்குழுவில் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை..!
210 இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி.. பொதுக்குழுவில் அடித்துக் கூறும் இபிஎஸ்