திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை... உருக்கமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

Published : Mar 26, 2021, 12:49 PM IST
திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை... உருக்கமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் தொடர முடியாது. மடியில் கனமில்லை என்பதால் தங்களுக்கு வழியில் பயமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் தொடர முடியாது. மடியில் கனமில்லை என்பதால் தங்களுக்கு வழியில் பயமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி சிவகங்கையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர்;- பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த எனது தொண்டை மட்டுமல்ல. என் உயிரே போனாலும் பரவாயில்லை என்றார்.

எந்த நேரத்திலும் என்னை பறறியே ஸ்டாலின் சிந்தித்து கொண்டுள்ளார். பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிமுக. இந்த தேர்தலோடு திமுக எனும் குடும்ப கட்சிக்கு முடிவு விழா நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

முதல்வர் பதவி என்பது மக்கள் இடம் பணிகளை செய்து முடிப்பது தான். சட்டப்பேரவையிலேயே திமுகவினர் அராஜகம் செய்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளதாக கூறிய முதல்வர், இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் தயாரா என கேள்வி எழுப்பினார். அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் தொடர முடியாது. மடியில் கனமில்லை என்பதால் தங்களுக்கு வழியில் பயமில்லை என்றார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!