வருமானவரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்பா.?? சத்திய பிரதா சாகு தெரிவித்த அதிரடி பதில்..

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2021, 12:32 PM IST
Highlights

மேலும் வருமான வரித்துறையினருக்கு என்று தனி நடைமுறைகள் உள்ளது. பணம் பிடிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வந்தால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு கோயம்புத்தூர் நிகழ்வே உதாரணம் என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண்கள் 3585 பேரும், பெண்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர். புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 30ம் தேதிக்குக்குள், அவரவர் வீடுகளுக்கு சென்று கிடைக்கும் வகையில் விரைவு தபாலில் (Speed post) அனுப்பியுள்ளதாக கூறினார். 

மேலும், தபால் வாக்குகள் பெற வீட்டுக்கு செல்லும் போது ஒரு தேர்தல் அலுவலர், ஒரு காவலர் மற்றும் அதை பதிவு செய்ய வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், வேட்பாளர் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் இருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதே போல, பதற்றமாக வாக்கு சாவடிக்கள் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறிய சத்யபிரத சாகு,  மொத்தமாக  88 ஆயிரத்து 937 வாக்கு சாவடிகள் உள்ளது என்றும், இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 300 என்றும் கூறினார்.  பதற்றமான வாக்குச்சாவடிகள் 10 ஆயிரத்து 528 உள்ளது என்றார். 44 ஆயிரத்து 759  வாக்குச் சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு, நேரலை மூலமாக கண்காணிக்கப்படும் (Web streaming).மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சாகு கூறினார். இந்நிலையில் வருமான வரித்துறையினர், அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும் எனக் கூறினார். 

மேலும் வருமான வரித்துறையினருக்கு என்று தனி நடைமுறைகள் உள்ளது. பணம் பிடிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதுமட்டுமின்றி பணப்பட்டுவாடா நடைபெறும் பகுதிகள், பெரிய அளவிலான பணம் பிடிக்கப்படும் பகுதிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கையே தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றார். அனைத்து வருமான வரிச்சோதனைகளும் தேர்தல் தொடர்புடையதானதா என்பதை விசாரித்த பின்பு தான் தெரியவரும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை புகாரின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதே போல பணப்பட்டுவாடா தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கோயம்புத்தூரே உதாரணம் என்றார்.தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு வாக்குபதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை வெளியிடலாம் என்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியிடலாம் என்றும் தெரிவித்தார். 

 

click me!