ஸ்டாலின் தான் வர்ராறு..! உஷாரான வருமான வரித்துறை..! எ.வ.வேலு கல்லூரிக்குள் புகுந்த அதிகாரிகள்..!

By Selva KathirFirst Published Mar 26, 2021, 12:11 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் எவ வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் எவ வேலு கல்லூரிக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தது வருமான வரித்துறை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் எவ வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் எவ வேலு கல்லூரிக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தது வருமான வரித்துறை.

கடந்த 2016 தேர்தல் முதலே திமுகவின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக எவ வேலு இருக்கிறார். இதனால் திமுக பொருளாளர் பதவியே அவருக்குத்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் முதலில் துரைமுருகனும் தற்போது டி.ஆர்.பாலுவும் அந்த பதவியில் உள்ளனர். ஆனால் உண்மையில் திமுகவின பொருளாளராக செயல்பட்டு வருபவர் எவ வேலு தான்.  அதிலும் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சமயங்களில் திமுகவின் பிரச்சாரங்கள், கூட்டணிகள், தேர்தல் பணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எவ வேலு தான் கவனித்துக் கொண்டார்.

பொதுவாக திமுக மற்றும் அதிமுவில் ஒரு வழக்கம் உண்டு. என்ன தான் வேட்பாளர்கள் தேர்தலுக்காக தனியாக செலவு செய்தாலும் கடைசி நேரத்தில் கட்சியில் இருந்து வேட்பாளர்கள் செலவுக்கு என்று ஒரு பெருந்தொகை அனுப்பி வைக்கப்படும். வீக்காக உள்ள தொகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் திமுக தரப்பு நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட சில தொகுதிகள் தற்போதும் வீக்காக இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கண்காணிப்பு காரணமாக திமுக வேட்பாளர்களால் தாங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பணத்தை வெளியே எடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறுகிறார்கள்.

 

ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள வட மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களிடம் பணம் தாராளமாக புழங்கியுள்ளது. இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை பணம் எவ வேலு தரப்பிடம் இருந்து தான் டிஸ்ட்ரிபியூட் ஆவதாக சந்தேகம் அடைந்துள்ளது. இந்த சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்காக திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அவர் வேறு எந்த ஓட்டலிலும் தங்காமல் எவ வேலுவின் அருணை கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கச் சென்றார். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு புறப்பட்ட மறு நிமிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே புகுந்துள்ளனர்.

கல்லூரி மட்டும் இல்லாமல் எவ வேலு தொடர்புடைய பத்து இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் வெறும் மூன்றரை கோடி ரூபாய்மட்டுமே சிக்கியதாக சொல்கிறார்கள். இது வருமா னவரித்துறைக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவும் கூறுகிறார்கள். திமுகவின் பொருளாதார நடவடிக்கைகளை கவனித்து வரும் எவ வேலுவிற்கு என்றாவது ஒரு நாள் ரெய்டு வரும் என்பது தெரியாமல் இருக்காது. எனவே அவர் எப்படி பணத்தை தனது கல்லூரியில் அதுவும் ஸ்டாலின் இருக்கும் போது வைத்திருப்பார் என்று கூட தெரியாத அளவிற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று கூறி திமுகவினர் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

கடந்த தேர்தலின் போது திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் வீட்டை சுற்றி சுற்றி வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போதும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது. அன்று முதலே எவ வேலு உஷார் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். தவிர இந்த தேர்தலுக்கான செலவுத் தொகையை வரவழைக்கும் வழி அதனை டிஸ்ட்ரிபியூட் செய்யும் விதம் போன்றவற்றை எல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பே திமுக தரப்பு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு முடித்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே இந்த முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையால் பணத்தை வெளியே எடுக்கவிடாமல் தடுக்க வேண்டுமானால் முடியுமே தவிர கைப்பற்ற முடியாது என்கிறார்கள்.

click me!