கருத்து கணிப்புகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.. உள்ளே பயம் வெளியே தில்லு காட்டும் குஷ்பு..

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2021, 11:40 AM IST
Highlights

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நடிகை குஷ்பு நிறுத்தப்பட்டுள்ளார். 

கருத்துக் கணிப்பு பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை எனவும், ஏனென்றால் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சிகளில் ஒவ்வொருவிதமாக கணிப்புகள் வெளிவருகிறது எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார். 

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நடிகை குஷ்பு நிறுத்தப்பட்டுள்ளார். 

 

ஆயிரம் விளக்கு தொகுதி என்பது திமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதி என்பதால் குஷ்பு அந்த தொகுதியில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் கோடம்பாக்கம் லேக் ஏரியா உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் குஷ்பூ வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தரலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சிகளிலும் மாறி மாறி வருகிறது. 

2011 ஆம் ஆண்டை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சி வரவே வராது என தெரிவித்தார்கள், ஆனால் அம்மா அவர்கள் வரலாறு படைக்கும் வகையில் வெற்றி பெற்றார். அதேபோன்று மத்தியில் 2019ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வரவே வராது என குறிப்பிட்டு கருத்துக் கணிப்பு தெரிவித்தன. ஆனால் அமோகமாக வெற்றி பெற்று பிஜேபி ஆட்சி அமைத்தது. என்னுடைய தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமித்ஷா, தமிழக முதலமைச்சர் விரைவில் வருகை தர உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!