திமுகவுக்கு எதிராக இஸ்லாமிய- கிறிஸ்தவ மக்களை தூண்டி விடும் சீமான்... இது வேற ரூட்டா இருக்கே..!

Published : Mar 26, 2021, 11:22 AM IST
திமுகவுக்கு எதிராக இஸ்லாமிய- கிறிஸ்தவ மக்களை தூண்டி விடும் சீமான்... இது வேற ரூட்டா இருக்கே..!

சுருக்கம்

பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவையில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘’பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான். பாஜக இந்துகளின் கட்சி. நாங்கள் தான் இந்துகளுக்கு பாதுகாப்பானவர்கள் என்று கூறுகிறது. இதையே தான் திமுகவும் சொல்கிறது. எங்கள் கட்சியில் 90% இந்துகள் தான் உள்ளனர். நாங்கள் தான் இந்துகளுக்கு நிறைய செய்திருக்கிறோம் என்று திமுகவும் கூறுகிறது.

பாஜகவுக்கும், திமுகவுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. பாஜகவும், திமுகவும் மறைமுகமான உறவை கொண்டுள்ளன. நானும் நான் தமிழர்களும் இருக்கும்வரை தமிழகத்தில் பாஜக வரமுடியாது நம்புகிறவர்கள் எனக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?