ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு புதிய பதவி... மக்களவையில் ஒப்புதல்..!

Published : Mar 26, 2021, 11:29 AM IST
ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு புதிய பதவி... மக்களவையில் ஒப்புதல்..!

சுருக்கம்

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப .ரவீந்திரநாத் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப .ரவீந்திரநாத் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கான இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் உறுப்பினர் பதவிக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத், மதுரை எம்.பி வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் மதுரை எம்.பி.வெங்கடேசன் தனது வேட்பு மனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டார். அதனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ரவீந்திரநாத் தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!