தொகுதிகளுக்குள்ளேயே முடங்கிய எக்ஸ் மந்திரிகள்,மாவட்டச் செயலாளர்கள்..! தவிக்கும் திமுக வேட்பாளர்கள்..!

By Selva KathirFirst Published Mar 26, 2021, 12:04 PM IST
Highlights

தங்கள் தொகுதியே தகிடுதத்தம் பாடுவதால் அமைச்சர்கள் யாரும் பக்கத்து தொகுதிக்கு கூட செல்வதில்லை என்று திமுக ஆதரவு ஊடகங்கள் தகவல்களை பரப்பி வரும் நிலையில் திமுகவிலும் கூட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியே வராமல் அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

தங்கள் தொகுதியே தகிடுதத்தம் பாடுவதால் அமைச்சர்கள் யாரும் பக்கத்து தொகுதிக்கு கூட செல்வதில்லை என்று திமுக ஆதரவு ஊடகங்கள் தகவல்களை பரப்பி வரும் நிலையில் திமுகவிலும் கூட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியே வராமல் அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் காலை தொடங்கி இரவு வரை பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு நள்ளிரவு வரை தேர்தலுக்கான பணம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வழக்கமாக தேர்தல் சமயத்தில் திமுக மற்றும் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர பிற தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வது வழக்கம். ஆனால்இந்த தேர்தலில் திமுகவும் சரி அதிமுகவும் சரி முக்கிய பிரபலங்கள் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வரவே யோசிக்கிறார்கள்.

இதற்கு காரணம் தேர்தல் களம் அந்த அளவிற்கு டஃப்பாக இருப்பது தான். தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான அலை அடிப்பதாகவும் அந்த கட்சி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று திமுகவினரும் அவர்களுக்கு ஆதரவான ஊடகத்தினலும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அதே போல் தோல்வி பயத்தால் அதிமுக அமைச்சர்கள் யாரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வர மறுப்பதாகவும், அவர்கள் தொகுதிகளிலயே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது உண்மை என்றாலும் திமுக தரப்பிலும் இதே நிலை தான் நீடிப்பதாக சொல்கிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை எவ வேலுவை தவிர வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் தாங்கள் போட்டியிடும் தொகுதியை தாண்டி வேறு தொகுதிக்கு செல்லவில்லை என்பது தான் கள நிலவரம். திமுக தலைமை அழுத்தம் காரணமாக பெயரளவில் சில மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் பக்கத்து தொகுதிகளுக்கு சென்றுவிட்டு மறுபடியும் தங்கள் தொகுதிகளுக்கு வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள். இதற்கு காரணம் தொகுதியில் திமுக வேட்பாளர்களுக்கு அதிமுக தரப்பில் இருந்து கொடுக்கப்படும கடுமையான போட்டி தான்.

இதே போல் பொதுவாக மாவட்டத்தில் உள்ள மற்ற வேட்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் இருந்து செலவுக்க கணிசமான தொகை ஒதுக்கும் வழக்கமும் இரு கழகங்களுக்கும் உண்டு. ஆனால் இந்த முறை அதிமுகவில் இருந்து மட்டுமே வேட்பாளர்களுக்கு செலவுக்கு கணிசமாக தொகை வழங்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். திமுக தரப்பில் இருந்து வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் தற்போது வரை எந்த உதவியும் செய்ய முடியாத சூழல் உள்ளதாக கூறுகிறார்கள். இதனால் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளை கவனித்து வெற்றி பெற்றால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

தமிழகத்தில் பொறுத்தவரை இதற்கு முன்பு எந்த தேர்தலையும் போல் இல்லாமல் இந்த தேர்தல் மிக கடுமையான மோதலாக இருக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது. திமுகவிற்கு ஆதரவான அலை தமிழகத்தில் உள்ளதாக உருவகப்படுத்தப்படுவது எல்லாமே அந்த கட்சிக்கு ஆதரவான ஊடகங்களும், ஊடகவியலாளர் களம் தான் என்பது களத்திற்கு சென்றால் தெரியும்.

click me!