ஒரு டோஸ் போட்டு விட்டேன், அடுத்த டோஸ் போட்டு விட்டு வெற்றி விழாவில் பேசுகிறேன்.. பாமக ராமதாஸ் தில்லு.

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2021, 1:29 PM IST
Highlights

கொள்ளை அடிக்க மாட்டார், ஊரை அடித்து உலையில் போட மாட்டார். எடப்பாடி மீண்டும் முதல்வராக வேண்டும், 4 ஆண்டு ஆட்சியில் எந்த கெட்டப் பெயரும் இல்லை. மக்களுக்கு ஏராளமான நல திட்டங்களை செய்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கஸாலியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர். கலைஞர் இங்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக ஒன்றும் செய்ததில்லை. அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை, இந்த பகுதி தண்ணீர் இல்லாமல் வறட்சியாக தான் உள்ளது. 

மற்றவர்களைபோல எங்கள் வேட்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டார். கொள்ளை அடிக்க மாட்டார், ஊரை அடித்து உலையில் போட மாட்டார். எடப்பாடி மீண்டும் முதல்வராக வேண்டும், 4 ஆண்டு ஆட்சியில் எந்த கெட்டப் பெயரும் இல்லை. மக்களுக்கு ஏராளமான நல திட்டங்களை செய்துள்ளார். கூவத்தை சுத்தப்படுத்திகிறோம் என அண்ணா முதல்வராக இருந்த போதே திமுக ஆரம்பித்தது, அதை இன்னும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுகிறேன் என திமுகவினர் சொன்னார்கள், நிறைவேற்றி னார்களா? அதிமுக ஆட்சி தான் அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. 

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார், மேயராக இருந்தார், சென்னைக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. பா.ம.க கூட்டணி - வெற்றி கூட்டணி, எந்த எதிர்மறை விமர்சனமும் இல்லை மாம்பழ சீசனில் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள். இதையெல்லாம் காருக்குள் இருந்தவாறே கண்ணாடி வழியாக மக்களை சந்திப்பது வருத்தம் அளிக்கிறது. மக்களை நேரடியாக பார்க்க முடியவில்லை என கூறினார். கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் போட்டு விட்டேன், அடுத்த டோஸ் போட்டு விட்டு வெற்றி விழாவில் மேடையில் பேசுகிறேன்.
 

click me!