மிகவும் வேதனை.. மனிதநேயமற்ற செயல்.. வங்கிக் கணக்கை முடக்கி விவசாயியின் உயிரைப் பறித்த வங்கி.. ராமதாஸ் கண்டனம்

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 1:03 PM IST
Highlights

கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75,000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75,000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- "திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தில், தந்தை பெற்ற பயிர்க்கடனுக்காக, வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால், சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை விவசாயி உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது!

கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75,000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைப்படி பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயி கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

click me!