இருளில் மூழ்கிய புதுச்சேரி.! வீதிக்கு வந்த மக்கள்... முதல்வர் தொகுதியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்...!

By Ajmal KhanFirst Published Oct 2, 2022, 8:53 AM IST
Highlights

மின் வெட்டால் புதுச்சேரி மாநிலம் இருளில் மூழ்கியதால் முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியில் தீப்பந்தம் ஏந்தியும், சாலைகளில் டயரை தீயிட்டு கொளுத்தியும்  எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தனியார் மயமாகும் மின்துறை

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறையில் பணிபுரியும் ஊழியர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 தினங்களாகவே ஆங்காகங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க புதுவை அரசும் தீவிரநடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மின் வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்வெட்டு ஏற்படும் தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவும் புதுச்சேரி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி சாலைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதுவை அரசை கண்டித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

மதுரை அழகர் கோவிலில் தீ விபத்து.! புரட்டாசி சனிக்கிழமையில் துயர சம்பவம் - பரபரப்பு சம்பவம் !

இருளில் மூழ்கிய புதுவை

இதே போல் முதலமைச்சர் ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடியிலும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்  தீப்பந்தம் ஏந்தியும், நடுரோட்டில் டயரை தீயிட்டு கொளுத்தி சலை சுற்றி அமர்ந்து ஆளும் அரசையும், முதலமைச்சரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் தலைமையில் லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி மின்தடைக்கு காரணமான ஆளும் அரசை கண்டித்தும், மின்துறையை கண்டித்து  கண்டன கோஷங்களை எழுப்பினர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு படிப்படியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனைடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படியுங்கள்

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கொடுக்க கூடாது..! மதவாத தீய சக்திகள் தலை தூக்கும்..! அலறும் பாஜக

click me!