தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் முழக்கம் எழும் என்பதால், தமிழக அரசு இதற்கு அனுமதியளிக்கக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.
அக்.11 - சமூக நல்லிணக்க பேரணி
காந்தி ஜெயந்தி தினத்தின் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்க்கு போட்டியாக சமூக நல்லிணக்க பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்திருந்து. இதற்க்கு பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முறையிட்ட நிலையில் அக்டோபர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதே போல அக்டோபர் 11 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க பேரணிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
மத வாத சக்திகள் தலை தூக்கும்
இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் எனவும், காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்கிறது எனவும் சொல்லப்படுகிறது. பி எஃப் ஐ யினால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் ஆபத்து உள்ளதென நேற்று உயர் நீதிமன்றத்தில் தமிழக கூறியுள்ள நிலையில், தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் முழக்கம் எழும் என்பதால், தமிழக அரசு இதற்கு அனுமதியளிக்கக் கூடாது.
அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் எனவும், காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்கிறது எனவும் சொல்லப்படுகிறது.
பி எஃப் ஐ யினால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் ஆபத்து உள்ளதென நேற்று (1/3)
அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறையை தூண்டும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு சீர் கெடும் அபாயம் உள்ளது. மதவாத தீய சக்திகளை தலைதூக்க விடுவது பேராபத்தை உண்டாக்கும் என்பதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வை நிராகரிக்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.