இல.கணேசன், நல்லகண்ணு, அமைச்சர் மெய்யநாதன் - அரசியல் தலைவர்கள் வரிசையாக மருத்துவமனையில் அனுமதி.!

By Raghupati RFirst Published Oct 1, 2022, 8:38 PM IST
Highlights

இன்று காலை முதலே அரசியல் பிரபலங்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறி சென்னை நோக்கிப் பயணம் செய்தார். அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

இதையடுத்து இரவு ரயிலில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் சென்னை திரும்பினார். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது உதவியாளர்கள் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் உடனடியாக அமைச்சருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேசனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க..கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!

தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

click me!