
அதிமுக கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் தொகுதி பா.ஜ.க கேட்கிறது, அதிமுகவும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறது. துறைமுகம் தொகுதி அதிமுக, தேமுதிக, பாஜக என மூன்று கட்சிகளும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறது.
வேளச்சேரி தொகுதி பா.ஜ.க கேட்கிறது, அந்த தொகுதியில் அதிமுகவும் போட்டியிட விருப்புகிறது. ஒசூர் தொகுதி பா.ம.க., தேமுதிக, பா.ஜ.க., என மூன்று கட்சிகளும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றன. கிணத்துக்கடவு பாஜக கேட்கிறது, ஆனால் அதிமுகவும் அந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. திருவண்ணாமலை தொகுதியை பாஜக கேட்கிறது, ஆனால் தேமுதிகவும் அதே தொகுதியை கேட்கிறது.
கோவை வடக்கு பாஜக கேட்கிறது, அங்கே அதிமுகவும் போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளது. தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா 2 தொகுதிகளை பா.ம.கவும், பா.ஜ.கவும் கேட்கிறது, திருத்தணி பாஜகவும் பாமவும் கேட்கிறது, செங்கல்பட்டு பா.ம.க. பாஜகவும் கேட்கிறது, திருப்போரூர் பா.ம.க., பாஜகவும் கேட்கிறது, இதுப்போல பல்வேறு தொகுதிகளை ஒரே கட்சிகள் வலியுறுத்தி கேட்பதால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.