மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்துக்கு கிடைத்த வெற்றி... ஆர்.டி.ஓ எனக் கூறி ஆட்டையைப்போட்ட திமுக பிரமுகர்

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2021, 3:38 PM IST
Highlights

திருச்சி திமுக மாநாட்டிற்கு வந்த திமுக இளைஞரணி உறுப்பினர் ஒருவர் பெரம்பலூர் அருகே ஆர்.டி.ஓ அலுவலர் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
 


திருச்சி திமுக மாநாட்டிற்கு வந்த திமுக இளைஞரணி உறுப்பினர் ஒருவர் பெரம்பலூர் அருகே ஆர்.டி.ஓ அலுவலர் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
 
தேனி மாவட்டம், அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர்  வீரணண் மகன் செல்வக்குமார். திமுக இளைஞரணி உறுப்பினராக உள்ள இவர் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அரூகே தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.டி.ஓ எனக் கூறி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்ததை அடுத்து, செல்வக்குமாரை ரோந்து  போலிஸார்  பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் தாம் திமுக இளைஞரணி உறுப்பினர் என்று கூறியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். மேலும், திமுக மாநாட்டிற்கு வந்தபோது வழிச் செலவுக்காக ஆர்.டி.ஓ எனக் கூறி வசூலில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். அதனைத்தொடர்ந்து செல்வக்குமாரின் இன்னோவா காரை பறிமுதல் செய்த போலிஸார், அதிலிருந்து மு.க.ஸ்டாலின் படம் போட்ட ஸ்டிக்கர்  மற்றும் திமுக கொடியும் இருந்ததை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பாடாலூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் பலரும், இதெல்லாம் வெறும் சும்மா ட்ரெய்லர் தான். திமுககாரன் டிசைன் டிசைனா திருடுறானே.. திமுக ஆட்சிக்கு மட்டும் வந்துச்சுனா மக்கள் வீதிகளில் நடமாடவே முடியாது! ஆர்டிஓ எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த திமுக பிரமுகர் கைது

.

முதலில் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு ஏதேனும் தொலைநோக்கு திட்டங்கள் அல்லது உரிமை தொகையை  அறிவிக்கலாம். இது ஸ்டாலின் நேற்று அறிவித்த தொலைநோக்குத் திட்டத்துக்கு கிடைத்த வெற்றி’’எனப் பதிவிட்டு வருகின்றனர்.

click me!