திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற 8 எம்.எல்.ஏ.,க்களுக்கு சிக்கல்... கதிகலங்கும் கூட்டணி கட்சிகள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 30, 2021, 1:13 PM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 வெற்றி பெற்றனர். 

திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது. அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது, எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 வெற்றி பெற்றனர். 

click me!