தமிழகத்தில் 3 நாட்கள் வெளுத்து வாங்கப்போகும் மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 30, 2021, 12:28 PM IST
Highlights

60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டின் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடற்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ. மழை பதிவானது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

இன்று முதல் 2 நாட்களுக்கு வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!