பிரியங்கா காந்திக்கு டெங்கு காய்ச்சல்..காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேராவிற்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.செங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த 23 ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பிரியங்கா காந்திஇது குறித்து மருத்துவமனை தலைவர் டி.எஸ். ராணா தெரிவிக்கும் பொது, இதுவரை டெல்லியில் மட்டும் 325 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிரியங்கா காந்தி சாதாரண காய்ச்சல் காரணமாகத்தான் சிகிச்சைக்கு வந்தார். பின்னர் தான் தெரிய வந்தது அவருக்கு டெங்கு காய்ச்சலென்று. தற்போது அவருடைய உடல்நலம் முனேற்றம் அடைந்துள்ளதாக கூறினார்.