தமிழகத்தில் நிலவும் பரப்பப்பான அரசியல் சூழலில்தமிழக பொறுப்பாளுனர் வித்யா சாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார்டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கும் இந்த தருணத்தில் ஆளுநரின் வருகை அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளதுஇதற்கு முன்னதாக, பொறுப்பாளுனர் வித்யா சாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை சந்தித்து, தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் நிலவரத்தை பற்றி ஆலோசனை செய்திருந்தார். மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.இந்த தருணத்தில் தமிழக பொறுப்பாளுனர் வித்யா சாகர் ராவின் வருகையால், தமிழகத்தில் ஆட்சி நிலைக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது