எந்த தீர்மானத்தையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள எடப்பாடி தலைமையிலான அரசு தயாராக உள்ளது எனவும், ஆட்சி கவிழ வேண்டும் என எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நினைக்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சி நிலைப்பதற்காகவும் கட்சியையும் சின்னத்தையும் மீட்பதற்காகவும் பன்னீர்செல்வத்துடன் கூட்டணி வைப்பதென்று முடிவெடுத்தார். மேலும் டெல்லி தலைமையிடமும் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து ஒபிஎஸ் அணியின் கோரிக்கைகளை ஏற்று இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. ஆனால் விரைவில் சசிகலாவை பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என வைத்தியலிங்கம் அறிவித்தார். இதையடுத்து 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள சின்னவீராம்பட்டினம் அருகே உள்ள தி விண்ட் பிளவர் என்ற ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் கடந்த 4 நாட்களாக எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், எந்த தீர்மானத்தையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள எடப்பாடி தலைமையிலான அரசு தயாராக உள்ளது எனவும், ஆட்சி கவிழ வேண்டும் என எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நினைக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.