நெகிழ வைத்த ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதி ரவிச்சந்திரன்... கொரோனா நிவாரணம் அளித்தார்..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2021, 2:58 PM IST
Highlights

சிறையில் தான் வேலை செய்த ஊதியத்தை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். ஏற்கெனவே ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ரூ 20 ஆயிரம், கஜா புயலுக்கு ரூ 5000 கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் கொரோனா நிவாரணம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அச்சுறுத்தி வருகிறது. மருந்துகள் இன்றியும், மருத்துவமனைகளில் இருக்கைகள் இன்றியும் மக்கள் மன்றாடி வருகின்றனர். பல மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பலரும் முதல்வர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். வசதியானவர்கள் கோடிகளில் கொடுத்தால், சிறுவர்கள் சேமித்து வைத்துள்ள உண்டியல் பணத்தை அளித்து வருகின்றனர். கூலித்தொழிலாளிகள் வரை தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் ரூ 5000 கொரோனா நிதியுதவியாக வழங்கியுள்ளார். சிறையில் தான் வேலை செய்த ஊதியத்தை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். ஏற்கெனவே ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ரூ 20 ஆயிரம், கஜா புயலுக்கு ரூ 5000 கொடுத்துள்ளார்.

click me!