திமுக அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளது. ஜி.கே வாசன் அந்தர் பல்டி. ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் நிதி.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 2:42 PM IST
Highlights

தமிழகத்தில் புதிய ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு அவர்கள் எடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கை என்பது வருகின்ற நாட்களில் பெருந்தோற்றை நிச்சயமாக தமிழகத்தில் குறைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும்,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து முதல்வரின் போது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பெருந்தோற்றை கட்டுப்படுத்த 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அந்த தீர்மானங்களுக்கு துணை நிற்கும். அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து பெருந்தோற்றை கட்டுப்படுத்த முதல்வர் பொது நிதிக்காக ரூபாய் 10 லட்சம்  காசோலையை கொடுத்துள்ளேன். 

மேலும் மத்திய மாநில அரசுகளின் பெருந்தொற்று, கட்டுப்பாடுகளை மக்கள் 100% கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிற்னே. அப்படி  கடைபிடிப்பது என்பது மரணப்படுக்கையில் இருப்பவர்களை காப்பாற்ற முயலும் என்றார். மத்திய அரசு ஊசி, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை எந்த தடையுமில்லாமல் உடனுக்குடன் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும், பெருந்தோற்று கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து ஒருவார காலமாகிறது,  இதில் கடுமையான கட்டுப்பாடு அடிப்படையிலே பெருந்தோற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார். 

அதே நேரத்தில் கட்டுப்பாட்டை மீறாமல் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் அவசரம் என்பதை  தெரிவிக்க விரும்புவதாகவும், தமிழகத்தில் புதிய ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு அவர்கள் எடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கை என்பது வருகின்ற நாட்களில் பெருந்தோற்றை நிச்சயமாக தமிழகத்தில் குறைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும், அதற்கு மீண்டும் பொதுமக்கள் 100% ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 
 

click me!