உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பட்டுவேட்டி கட்டி வந்து மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க;- திருச்சியில் மாஸ் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி; தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு
அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் புறப்பட்டு நேற்று இரவு அங்கு தங்கினர். இதனையடுத்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் உள்ள பஞ்சகரை மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இறங்கி அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கோவில் தாயார் மற்றும் பெருமாள் சன்னதியில் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து தமிழர்கள் பாடப்படும் கம்பராமாயணத்தை கேட்க உள்ளார். பின்னர், திருச்சியில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.