நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு.. இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Jan 20, 2024, 10:50 AM IST
Highlights

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். 

சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்க உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் செல்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் 2024 பணி! பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம் -இந்தியா வெல்லும்! மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். இதனையடுத்து வழிநெடுகிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இருவரும் காரில் பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். 

இதையும் படிங்க;-  கருணாநிதியின் வலதுகரமான ஆற்காடு வீராசாமிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம்  மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் ஒப்படைக்கிறார். இங்கு சுடர் தீபத்தை முதல்வர் ஏற்றி வைக்கிறார். பின்னர், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுப்பயணம் வந்த 1,500 பேர் மேற்கொண்டஇருசக்கர வாகனங்கள் மாநாட்டு திடலுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது. 

click me!