24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்...!! மாநில முதல்வர்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி..!!

Published : Apr 11, 2020, 02:14 PM ISTUpdated : Apr 11, 2020, 02:32 PM IST
24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்...!! மாநில முதல்வர்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி..!!

சுருக்கம்

இந்நிலையில்  மத்திய அரசு இந்த கருத்து கேட்பு நடத்துவதற்கு முன்னர் பஞ்சாப் ,  ஒரிசா போன்ற மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர் .

கொரோனா வைரஸ் தொடர்பான பரிந்துரைகளையும் கருத்துக்களையும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் ,  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் இந்த வைரசுக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.  முன்னதாக நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது , இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது நிலையிலேயே நீடிக்கிறது .

 

 இன்னும் அது மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை  அதிவது சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது ,  இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதியுடன்  ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் ,  ஊரடங்கு உத்தரவை  நீட்டிக்க வேண்டுமா வேண்டாமா  என்பதை அறிந்து  கொள்ளும் வகையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார் ,  இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களது கருத்துக்களை பிரதமரிடம் தெரிவித்தனர் ,  அதில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்த வேண்டும் எனில் ஊரடங்கு உத்தரவு அவசியம் ,  தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவை நீக்கினால் அது சமூக பரவலாக மாற வாய்ப்பிருக்கிறது  என கூறியதுடன் ,  ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  

இந்நிலையில்  மத்திய அரசு இந்த கருத்து கேட்பு நடத்துவதற்கு முன்னர் பஞ்சாப் ,  ஒரிசா போன்ற மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர் .  இந்நிலையில் பல மாநிலங்களும் உத்தரவை நீட்டிக்க முன்வந்துள்ளன .  அப்போது முதல்வர்கள் மத்தியில் உரையாற்றிய  பிரதமர் மோடி ,  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாள் முதல் 24 மணி நேரமும் தொடர்ந்து கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன் , எனவே  எந்த மாநில முதல்வரும் எந்த நேரத்திலும் கொரோனா தொடர்பான கருத்துக்களையோ அல்லது பரிந்துரைகளையோ ஆலோசனைகளையோ தெரிவிக்க வேண்டுமானால் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார் .  நாம் அனைவரும் தோளோடு தோள் நின்று போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!