" தேமுதிகவுக்கு உடனே அண்ணியார் தலைவராகனும் ".. பிரேமலதாவை குளிரவைத்த மா.செக்கள்.?? அப்போ கேப்டன்.

Published : Jun 03, 2022, 02:27 PM ISTUpdated : Jun 03, 2022, 03:12 PM IST
" தேமுதிகவுக்கு உடனே அண்ணியார் தலைவராகனும் ".. பிரேமலதாவை குளிரவைத்த மா.செக்கள்.??  அப்போ கேப்டன்.

சுருக்கம்

விரைவில் தேமுதிகவுக்கு பிரேமலதா விஜயகாந்த்தை தலைவராக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவில் தேமுதிகவுக்கு பிரேமலதா விஜயகாந்த்தை தலைவராக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா தலைவராகும் பட்சத்தில் கட்சி உத்வேகத்துடன் செயல்பட முடியும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதா கருணாநிதி இருந்தபோதே துணிந்து அரசியல் களத்தில் குதித்தவர் கேப்டன் விஜயகாந்த். மக்களுடனும் ஆண்டவனும் தான் கூட்டணி என கூறிய அவர், ஒரு சில தேர்தல்களிலேயே அதிமுகவுடன் கைகோர்த்தார். அதில் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தவர் ஆவார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அக் கட்சி வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. விஜயகாந்த் குடும்ப ஆதிக்கத்தால் கட்சி சிக்கிக் கொண்டது என கூறி அவரின் தீவிர விசுவாசிகள் கூட மாற்று கட்சிகளுக்கு தாவும் நிலைக்க தேமுதிக தள்ளப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அக்கட்சி கலகலத்துப் போகும் நிலை உருவானது. அதன் உடனே விஜயகாந்தின் உடல்நிலையும்  நலிவுற்ற காரணத்தால் அந்தக் கட்சி எழுச்சியுடன் செயல்பட முடியாத நிலைக்கு ஆளானது.

கடந்த 10 ஆண்டு காலமாக அந்தக் கட்சியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை, பெயருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்ற அளவில் தேமுதிக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் விஜயகாந்த் மீண்டும் வருவார், மீண்டும்  அதை கம்பீரத்துடன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார், விரைவில் தேமுதிக ஆட்சி அமையும் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் மேடைதோறும் பேசிவருகின்றனர். இந்நிலையில் நேற்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  திமுக அரசு என்றாலே மின்வெட்டு தான் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருகிறது, அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலைகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்ற வேண்டும்.

தேர்வு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மின்வெட்டை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு அதிகரித்துவிட்டது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது, எதிர்வரும் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான வியூகங்களும், கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மாவட்ட செயலாளர்கள் சிலர் தேமுதிகவை வலுப்படுத்த வேண்டும் என்றால்  அண்ணியார் பிரேமலதா அவர்கள் தலைவராக அல்லது செயல் தலைவராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தற்போது தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் இருந்துவருகிறார் இந்நிலையில் அவரை தலைவராக வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதேபோல் தேமுதிக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேமுதிக குடும்ப கட்சி என்றும் ஏற்கனவே விமர்சனம் இருந்து வருகிறது. அதேவேளையில் விஜயகாந்த் உடல் நலிவுற்று கட்சி தொய்வை சந்தித்து வரும் நிலையில் அக்கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதா விஜயகாந்த் தலைவராக வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி