
கலைஞரின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழறிஞர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம்’ என்று கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், '#ஜூன்_03: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள்.
இந்நாளை 'மாநில சுயாட்சி நாளாக' நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர். இந்நாளில் கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்' என்று பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர். அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி.எளிய மக்களின் பார்த்தசாரதி. அவர் புகழ் நீடு வாழ்க!! ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Kalaignar : ’உடன்பிறப்பே’ என்று உணர்வூட்டியவர்.. தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
இதையும் படிங்க : Kamal : ஒடுக்கப்பட்டோருக்கான ஒலி..முரசறைந்த கலைஞரை நினைவு கூர்வோம் - கமல் ஹாசன் ட்வீட் !