தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்சி நிகழ்வில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறது. அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேமுதிக தலைவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்சி நிகழ்வில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறது. அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இதனை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்து நலமும் இருப்பதாக கூறினார். இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சூழலில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் உள்ள ஜி.டி.என்.பேலஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க;- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. கெத்தாக மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீடு திரும்பிய விஜயகாந்த்.!
இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். மேலும், தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்தும், விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.