Annamalai VS Stalin : எங்க கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு..! வரவேற்பு தெரிவித்த அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Dec 14, 2023, 10:17 AM IST
Highlights

பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அண்ணாமலை, கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பால் கொள்முதல் விலை உயர்வு- அண்ணாமலை வரவேற்பு

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, 18.12.2023 முதல் பால் கொள்முதல் விலை ஊக்கத்தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும்  பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Latest Videos

இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளின் சார்பாக நாங்கள் முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை தமிழக பாஜக  வரவேற்கிறது. 

கொழுப்பை குறைத்து அதிக விலையில் பால் விற்பனை

தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும் @BJP4TamilNadu தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறது. முன்பைப் போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.  மேலும், கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

click me!