ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து போட்டி..! வேட்பாளரை அறிவித்து அதிரடி காட்டிய பிரேமலதா விஜயகாந்த்

By Ajmal KhanFirst Published Jan 23, 2023, 4:17 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், வேட்பாளராக ஆனந்த் என்பவரை அறிவித்துள்ளார்.
 

தேமுதிக தனித்து போட்டி

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார். அதிமுக சார்பாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், பெண் ஒருவரை வேட்பாளராக இடம் பெறுவார் என சீமான் அறிவித்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் ஆன்ந்த்

இந்தநிலையில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடலாமா அல்லது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கலாமா என விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தேமுதிக தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேமுதிகவில்  15 ஆண்டு காலமாக பணியாற்றி வரும்  ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆன்ந்த் என்பவர் போட்டியிடுவார் என பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவா..? கமல்ஹாசன் கூறிய புதிய தகவல்
 

click me!