என் வழி தனி வழி..! ஓபிஎஸ் மாவட்டத்தில் களம் இறங்கிய இபிஎஸ்..! கெத்து காட்டிய எடப்பாடி ஆதரவாளர்கள்

Published : Jan 23, 2023, 01:39 PM IST
என் வழி தனி வழி..! ஓபிஎஸ் மாவட்டத்தில் களம் இறங்கிய இபிஎஸ்..! கெத்து காட்டிய எடப்பாடி ஆதரவாளர்கள்

சுருக்கம்

ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டதிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தேனிக்கு சென்ற இபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ்யின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குள்  எடப்பாடி பழனிசாமியால் செல்ல முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சவால் விடுத்து இருந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு இன்று காலை வந்தார். தேனி மாவட்டம் கம்பத்தில்  முன்னாள் போடி சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ், மற்றும் கூடலூர் நகர் கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டம் வந்தார்.அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ்..! சட்டப்பேரவையில் தீர்மானம்.? ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்

உற்சாக வரவேற்பு அளித்த தொண்ட்ர்கள்

எடப்பாடி பழனிசாமியை தேனி அன்னஞ்சி புறவழிச்சாலை பிரிவு அருகே,கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு பூரண கும்ப மரியாதை அளித்து மேல தாளத்துடன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கணும்

அப்போது பேசிய அவர், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். மனிதனுக்கு இன்பமான நாள் திருமண நாள். மணமக்களின் பெற்றோரின் கனவை எல்லாம் நினைவாக்குவது மணமக்கள் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்! ஆதரவுக்காக இப்படி தேடி ஓடுகிறார்களே? வேதனையில் பூங்குன்றன்..!

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!