திமுக மாவட்டச் செயலாளர்களை கிராஸ் செக் செய்ததா கிஷோரின் ஐ பேக்..? ஸ்டாலின் அவசர கூட்டத்தின் பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Jun 15, 2020, 10:04 AM IST
Highlights

திமுகவில் இனி அனைத்து முடிவுகளையும் ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தான் எடுக்க உள்ளார் என்கிற ரீதியில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வெளியேற்றவே திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

திமுகவில் இனி அனைத்து முடிவுகளையும் ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தான் எடுக்க உள்ளார் என்கிற ரீதியில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வெளியேற்றவே திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

திமுகவும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனமும் இணைந்து சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. ஐ பேக் நிறுவனத்தின் வியூகங்களில் ஒன்று தான் ஒன்றினைவோம் வா திட்டமாகும். இதன் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் உதவிகள் செய்து கொரோனா காலத்தில் திமுக ஸ்கோர் செய்தது. மேலும்nஇந்த திட்டம் தொடர்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர்களை நேரடியாக ஐ பேக் நிறுவனத்தின் சிலர் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் உதவிகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் திமுகவினர் செய்ததாக கூறிய உதவிகளை கிராஸ் செக் செய்து அதிலும் சில சந்தேகங்களை எழுப்பி ஐபேக் டீம் ஸ்டாலினுக்கு நேரடியாக ரிப்போர்ட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒன்றினைவோம் வா திட்டத்தை செயல்படுத்தி வந்த திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சிலர்அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. களத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றுவது எவ்வளவு சிரமம்? அதையும் மீறி நாங்கள் களம்இறங்கியுள்ளோம். ஆனால் எங்களுடைய பணிகளிலேயே சந்தேகம் வந்து கிராஸ் செக் செய்வது எப்படி சரியாகும் என்றும் நிர்வாகிகள் கொதிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஐ பேக் நிறுனத்தின் இதுபோன்ற செயல்களால் டென்சன் ஆன சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்மையில் மறைந்த எம்எல்ஏ அன்பழகன் ஸ்டாலினிடம் நேரடியாக பேசியுள்ளார். அதிலும் கடந்த முறைநடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஸ்டாலினிடம் வெளிப்பப்படையாக கேட்ட கேள்விகள் மற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்களை யோசிக்க வைத்தது. மேலும் அவர்களும், கட்சிக்கு இத்தனை வருடங்களாக உழைக்கும் எங்களை யாரோ பீகாரில் இருந்து வந்தவரை வைத்து கிராஸ் செக் செய்வதா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த யோசனை தான் ஒன்றினைவோம் வா திட்டம் கடைசி நேரத்தில்சுணக்கம் காண காரணமாக அமைந்தது. ஆனால் ஐ பேக் டீம் வேலையோ ஸ்டாலின் இமேஜை பில்ட் அப் செய்வது மட்டும் தான். அப்படி இருக்கையில் திமுகவினர் எப்படி களப்பணி ஆற்றுகிறார்கள் என்று இவர்கள் எதற்கு கிராஸ் செக் செய்கிறார்கள் என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒன்றினைவோம் வா திட்டமே ஸ்டாலின் இமேஜை பில்டப் செய்யத் தான், அப்படிஇருக்கையில் அதில் சிறு தவறு நடந்தாலும் ஸ்டாலின் இமேஜை நேரடியாக பாதிக்கும் என்பதால் தான் ஒவ்வொரு பகுதியிலும் அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தாங்கள் கிராஸ் செக் செய்ததாகவும் இது தங்களின் அன்றாட பணி என்று ஐ பேக் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் தான் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஐ பேக் டீமின் முக்கிய பணி என்ன? அவர்கள் கட்சி செயல்பாடுகளிலும் எந்த வகையிலும் தலையிட முடியாது, அவர்களின் வியூகத்தை நாம் சரியாக செயல்படுத்துகிறோமா அதன் பீட்பேக் என்ன என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள், இதில் கட்சி நிர்வாகிகள் தங்களை கிராஸ் செக் செய்கிறார்களா? என்று கவலைப்படத் தேவையில்லை என்று ஸ்டாலின் விளக்கம் அளித்ததாக சொல்கிறார்கள்.

click me!