ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... பரபரப்பாக ஓடிய ஆலோசனை.. உஷாராக கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு..?

By Asianet TamilFirst Published Jun 15, 2020, 8:01 AM IST
Highlights

“ தீர்ப்பு வழங்கி மூணு மாசம் ஆகியும், சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. இது சட்டத்துக்குப் புறம்பானது” என மனுவில் சொன்னதோடு மணிப்பூர் வழக்கையும் கோத்துவிட்டு மனுவில் குறிப்பிட்டுருக்காங்க திமுக. மணிப்பூர்ல தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய 5 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால, அவுங்கள சட்டப்பேரவைக்குள் செல்ல மணிப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதிச்சிருக்கு. இதையேத்தான் திமுகவும் 11 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்துல கேட்குது. 
 

கொரோனா வைரஸ் சுழன்றடிக்கும் இந்த நேரத்துல திமுக உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று அதிமுக தரப்புல யாருமே எதிர்பார்க்கல. என்ன விஷயம்ணு குழம்பிக்க வேண்டாம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள்  சம்பந்தப்பட்ட வழக்கில், திமுக மீண்டும் உச்ச நீதிமன்றம் போனதுதான் அரசியலில் கொஞ்சம் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கு.
கடந்த 2017-ல்ல சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு  நம்பிக்கை வாக்கு கோரியபோது இந்த 11 எம்.எல்.ஏ.க்களும் எதிர்த்து ஓட்டு போட்டாங்க. ஆனால், அடுத்த சில மாதங்கள்ல ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைஞ்சதால, எல்லாம் சரியா போச்சுன்னு இருந்துட்டாங்க. இந்த நேரத்துலதான் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யணும்னு சபாநாயகரிடம் திமுக சார்பில் புகார் கொடுத்தாங்க. ஆனால், அந்தப் புகார் மேலே சபாநாயகர் நடவடிக்கை எடுக்கல. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டாங்க. இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துச்சு. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு திமுக போச்சு.
நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்குல, 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முடிவெடுத்து சபாநாயகர் அறிவிக்கணும்னு கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடிச்சு வைத்தது. அதாவது, சபாநாகயர் சொன்ன உறுதியை ஏற்றுத்தான் நீதிமன்றம் வழக்கை முடிச்சு வைச்சது. அந்த வேகத்தோட ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினாரு. அந்த நோட்டீஸூக்கு 11 எம்.எல்.ஏ.க்களும் பதில் அனுப்பிட்டதா சொல்றாங்க. அதன் பிறகு கொரோனா முந்திக்கிட்டு வந்துட்டதால, அதில் மேற்கொண்டு என்ன நடந்துச்சுன்னு தெரியல.


இப்போ திமுக இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதுசா மனு தாக்கல் செஞ்ச பிறகுதான், அந்த வழக்கு பத்திய பரபரப்பு திரும்பவும் கிளம்பியிருக்கு. “ தீர்ப்பு வழங்கி மூணு மாசம் ஆகியும், சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. இது சட்டத்துக்குப் புறம்பானது” என மனுவில் சொன்னதோடு மணிப்பூர் வழக்கையும் கோத்துவிட்டு மனுவில் குறிப்பிட்டுருக்காங்க திமுக. மணிப்பூர்ல தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய 5 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால, அவுங்கள சட்டப்பேரவைக்குள் செல்ல மணிப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதிச்சிருக்கு. இதையேத்தான் திமுகவும் 11 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்துல கேட்குது. 
இந்த வழக்கு நாளைக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கு. இதைப் பற்றி கடந்த 3 நாட்களாக ஓபிஎஸ் தரப்பில் ஆலோசனை செஞ்சிருக்காங்க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது, சபைக்கு வரக்கூடாது என்று உத்தரவு போடுவதெல்லாம் சபாநாயகர் பணி. இந்தப் பணியை நீதிமன்றமே செய்யணும்னு திமுக எதிர்பார்க்கறது எடுபடாதுன்னு வழக்கறிஞர்கள் ஓபிஎஸிடம் எடுத்து சொல்லியிருக்காங்க. இருந்தாலும், எதிர் தரப்புல ஆஜர் ஆகுற வழக்கறிஞர், வலுவான பாயிண்டுகளை எடுத்துவைச்சா, சிக்கலாகுமோங்கிற அச்சமும் இருக்கு. அதனால, உச்ச நீதிமன்றத்தில ‘கேவியட்’ மனுவை தாக்கல் செஞ்சிடலாம்னு ஓபிஎஸ் தரப்புக்கு வழக்கறிஞர்கள் யோசனை கொடுத்திருக்காங்க. அனேகமா உச்ச நீதிமன்றத்துல ‘கேவியட்’ மனுவை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்யும்ணு எதிர்பார்க்கலாம்.  

click me!