நான் கூத்தாடி.. என் தொகுதிக்கு முதல்வர் நிதி கொடுக்கவில்லை.. மனவருத்தத்தில் எம்எல்ஏ கருணாஸ்.!!

By T BalamurukanFirst Published Jun 14, 2020, 9:57 PM IST
Highlights

நான் ஒரு கூத்தாடி என்றும் எனக்கு 2ம் நம்பர் தொழில் ஏதும் கிடையாது என்றும் அதனால் மக்களுக்கு உதவிசெய்ய என்னிடம் பணம் இலலை. முதல்வரிடம் நிதிகேட்டால் மக்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கியதாக சொல்லுகிறார்.நான் இதுவரைக்கும் 2ஆயிரம் டன் அரிசி மக்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்று தொகுதி மக்களிடம் விளக்கமளித்திருக்கிறார் கருணாஸ் எம்எல்ஏ.

நான் ஒரு கூத்தாடி என்றும் எனக்கு 2ம் நம்பர் தொழில் ஏதும் கிடையாது என்றும் அதனால் மக்களுக்கு உதவிசெய்ய என்னிடம் பணம் இலலை. முதல்வரிடம் நிதிகேட்டால் மக்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கியதாக சொல்லுகிறார்.நான் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரைக்கும் 2ஆயிரம் டன் அரிசி மக்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்று தொகுதி மக்களிடம் விளக்கமளித்திருக்கிறார் கருணாஸ் எம்எல்ஏ.

ராமநாதபுரம் மாவட்டம். திருவாடனை அடுத்த அலமனேந்தலில், கண்மாய் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அதை கலெக்டர் வீரராகவ் ராவுடன் பார்வையிட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றால், பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என எண்ணுவதாகவும் ஆனால், அதற்கு தேவையான பணம் தம்மிடம் இல்லை என வேதனை தெரிவித்த அவர், தான் ஒரு கூத்தாடி என்றும், தனக்கு 2ஆம் நம்பர் தொழில் ஏதும் கிடையாது.எனவே தொகுதி மக்களுக்கு உதவ பணமில்லை என வேதனை தெரிவித்த கருணாஸ், ஏழை எளியோருக்கு இதுவரை 2 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறேன். முதலமைச்சரிடம் நிதி கேட்டால் ஏற்கனவே மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, அரிசி உள்ளிட்ட நிவாரணம் வழங்கிவிட்டதாக கூறினார் என்றார்.
 

click me!