மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.! அமைச்சர் உதயக்குமார் அதிரடி பேட்டி.!!

By T BalamurukanFirst Published Jun 15, 2020, 9:03 AM IST
Highlights

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை அளித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சென்னை சென்று வருவோரை கட்டுப்படுத்தமுடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை அளித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சென்னை சென்று வருவோரை கட்டுப்படுத்தமுடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேக ரயில் போன்று வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றுக்கு சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் 20ஆயிரம் பேர் வந்திருப்பதாகவும் தமிழக அரசு ஒருநாளைக்கு 3ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை எம்பி வெங்கேடசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுசம்மந்தமாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக எம்எல்ஏக்கள் டாக்டர் சரவணன் மூர்த்தி எம்பி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்.


இந்த நிலையில் இன்று வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்... மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்த நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா போரில் தமிழக அரசு வெற்றி பெறும். சென்னை வந்து செல்வோரை தடுக்க முடியாது. அவர்கள் ஏதாவது வேலை காரணமாக வந்துவிட்டு திரும்புவராக இருக்கலாம். மக்களை காக்கு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் சரக்கு வாகனம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.என்றார்.

click me!