மதுரை திமுகவில் கட்சிப் பதவிகள் விற்பனைக்கு... போஸ்டர் அடித்து மானத்தை வாங்கும் உடன்பிறப்புகள்..!

Published : Sep 10, 2021, 09:25 PM ISTUpdated : Sep 10, 2021, 10:16 PM IST
மதுரை திமுகவில் கட்சிப் பதவிகள் விற்பனைக்கு... போஸ்டர் அடித்து மானத்தை வாங்கும் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுகவில் பதவிகள் விற்பனை செய்யப்படுவதாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.   

தமிழகத்தின் போஸ்டர் தலைநகரம் மதுரைதான். விதவிதமாகவும் எந்த விவகாரமாக இருந்தாலும் மதுரையில் போஸ்டர் அடித்து அதை வெளிப்படுத்திவிடுவார்கள். இந்நிலையில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுகவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த போஸ்டரில், “மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்புக்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்புக்கு ரூ.3 லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்புக்கு ரூ.3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்புக்கு ரூ.2.50 லட்சம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, “இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள். உழைத்தவனுக்கு ஒன்றும் இல்லை. பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு. இப்படிக்கு மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டர்கள்” போன்ற வாசகங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் மதுரை திமுகவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!