போயஸ் கார்டனுக்கு திடீரென வருகை தந்த சசிகலா... என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 7:10 PM IST
Highlights

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதலே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அரசு அனுமதி மறுக்கப்பட்டதால் எளிமையான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி கோயிலில் சசிகலா இன்று வழிபாடு செய்தார். 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதலே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அரசு அனுமதி மறுக்கப்பட்டதால் எளிமையான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி ஆலயத்தில் விநாயகருக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா விநாயகருக்கு மலர் தூவி வழிபட்டார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லம் அருகே, சுமார் 90 ஆண்டுகள் பழமையான ஆலமர லிங்கத்தை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெய விநாயகர் கோயிலுக்கு வந்து வழிபட்டார்.

சசிகலாவுடன் அவரது உறவினர்கள் 4 பேர் மட்டுமே இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர். சிறையில் இருந்து திரும்பிய சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது இல்லத்தை பார்வையிட வந்தார். அதன்பிறகு இன்று அவர் போயஸ் கார்டன் வருகை தந்துள்ளார். ஒவ்வொரு முறை போயஸ் கார்டனில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஜெயலலிதா வெளியே வரும் போது அதே சாலையில் உள்ள சிறிய ஜெய கணபதி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டுத் தான் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!