ஏழை பணக்காரர் எந்த பாகுபாடும் இன்றி தடுப்பூசி.. இந்த சாதனைக்கு ஒற்றுமையே சான்று.. பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Oct 22, 2021, 11:03 AM IST
Highlights

கொரோனா இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிலரிடம் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் இன்று நாம் பதில் அளித்திருக்கிறோம். நம் மீதான விமர்சனங்கள் தவறு என நிரூபித்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி திட்டம் சென்றடைந்துள்ளது. 

நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் 100 கோடி தடுப்பூசி சாதனை சாத்தியமானது என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகையில்;- சிறப்பான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி திட்டம் 100 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் பின்னால், 130 கோடி மக்களின் சக்தி இருக்கிறது. நேற்று மிகப்பெரிய சாதனை படைத்து நாம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம். இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

 

புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த பரிசு. கடுமையான சோதனைக்கிடையே இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றப்பட்டது. உலகளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. கொரோனா இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிலரிடம் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் இன்று நாம் பதில் அளித்திருக்கிறோம். நம் மீதான விமர்சனங்கள் தவறு என நிரூபித்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி திட்டம் சென்றடைந்துள்ளது. 

இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் பின்பற்றப்படவில்லை. ஏழை பணக்காரர் என எந்த பாகுபாடும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு ஒற்றுமையாக இருந்ததால், இந்த திட்டம் வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலைமாறி, சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் தேசம் என்ற நிலை உருவாகி இருப்பது மாபெரும் சாதனை. வளர்ந்த நாடுகளால் கூட படைக்க முடியாத சாதனையை இந்தியா படைத்துள்ளது. பண்டிகைக்காலங்களில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. மாஸ்க் போடுவதை தொடர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

click me!