100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் நம்பர் அல்ல. இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயம்... மோடி பெருமிதம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 22, 2021, 10:38 AM IST
Highlights

கொரோனா காலத்தில் துவண்டு விடாமல் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். 

கோவிட் 19 பாதிப்புக்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருகிறது, முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உரையாற்றிய அவர், ‘’தடுப்பூசி செலுத்துவதில் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவே நடத்தியுள்ளோம். கொரோனா காலத்தில் துவண்டு விடாமல் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம்.  உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது.

 100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் நம்பர் அல்ல. இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயம். கடிமான நேரத்திலும் நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கான சான்று. 

விஐபிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரத்தௌ தவிர்த்து, அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் முறிலும் அறிவியல் அடிப்படையில் நடத்தப்பட்டது என்ற உண்மையை எண்ணி நாம் பூரிப்படைய வேண்டும்.  

கொரோனா பெருந்தொற்று யார் மீதும் பாகுபாடு காட்டாத போது, தடுப்பூசியில் எப்படி பாகுபாடு காட்ட முடியும்? நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் மக்களுக்கு எளிதாக கிடைத்தது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் பாதுகாப்பானது.

நமது வேக்சின் தயாரிப்புகள் இப்போதும், இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் - பிரதமர் மோடிதடுப்பூசி சாதனையின் மூலம் ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது; மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள தயக்கத்தையும் நம்மால் முறியடிக்க முடியும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!