துரை வைகோ நியமிக்கப்பட்டது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல்.. வைகோ மீது பாசம் மாறாத நாஞ்சில் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 9:30 AM IST
Highlights

இந்நிலையில் வைகோ உடல் நலிவுற்றுள்ள நிலையில், கட்சியில் உள்ள பெரும்பாலானோர் அவரது மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவருக்கு முக்கிய பொறுப்பு தரவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். 

மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், இது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல் என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவில் இருந்து விலகிய வைகோ, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவை தொடங்கினார். அவரது கட்சி இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சி பெற்றது. தமிழகத்தில் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்ற எதிர்பாக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். 

இதையும் படியுங்கள்:  திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.

இந்நிலையில் வைகோ உடல் நலிவுற்றுள்ள நிலையில், கட்சியில் உள்ள பெரும்பாலானோர் அவரது மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவருக்கு முக்கிய பொறுப்பு தரவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய தனது கட்சியிலேயே, தன் மகனுக்கு பதவி கொடுத்தால் அது தனக்கு எதிராக மாறிவிடும், கடும் விமர்சனத்திற்கு தான் ஆளாகக் கூடும் என்று அஞ்சிய வைகோ, முதலில் மறுப்பு தெரிவித்தார். ஆனால் நேற்று முன் தினம் வைகோ தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் துரை வைகோ மதிமுகவிட் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்காட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கட்சியை விட்டு விலகி உள்ளார்.

இதையும் படியுங்கள்: சசிகலாவும் ஸ்டாலினும் கை கோர்த்துட்டாங்க.. அதிமுகவை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. கதறிய ஜெயக்குமார்.

இந்நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். நீண்டகாலம் அதிமுகவில் பயணித்த நாஞ்சில் சம்பத், மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துறை வைகோ பொறுப்பேற்றதை வரவேற்றுள்ளார். இது வாரிசு அரசியல் அல்ல வரலாற்று அரசியல் என்றும் அவர் கூறியுள்ளார். பல காலமாகவே துரை வைகோ கட்சி பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார், தொண்டர்களின் பேராதரவை பெற்றவராக இருக்கிறார். இறுதிவரை தான் பொது பணியாற்றுவதாக வைகோ தெரிவித்திருந்தாலும், அவரது உடல் நலிவுற்றுள்ளது. எனவே கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச துரை வந்திருக்கிறார். அவரது நியமனத்தை முழுமனதோடு வரவேற்கிறேன். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 

click me!