இந்தியாவின் தடுப்பூசி திட்டம் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. துவக்கத்தில் தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்ப ப்பட்டது அது அனைத்திற்கும் இப்போது விடை கிடைத்துள்ளது என பாரத பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. துவக்கத்தில் தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்ப ப்பட்டது அது அனைத்திற்கும் இப்போது விடை கிடைத்துள்ளது என பாரத பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியுள்ளது. தடுப்பூசி போட ஆரம்பித்து 9 மாதங்களில் 100 கோடி டேஸ் தடுப்பூசியை இந்தியா நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.
அப்போது அவர் கூறியதாவது, 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம், நேற்று மிகப்பெரிய சாதனையை நாம் படைத்திருக்கிறோம், நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால் தான் 100 கோடி தடுப்பூசி சாதனை சாத்தியமானது, இந்த சாதனையின் மூலம் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது, இந்தியாவின் தடுப்பூசி இத்திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது, இதற்காக நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதனையின் பின்னால் 130 கோடி நாட்டு மக்களின் சக்தி உள்ளது, இந்தியா ஒரு சக்தி மிக்க நாடு என்பது மீண்டும் நிரூபித்துள்ளது. 100 கோடி தடுப்பூசி சாதனை ஒவ்வொரு இந்தியரின் வெற்றிக்கதை, 100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் அல்ல அது புதிய அத்தியாயத்தின் தொடக்கம், கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதில் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்: துரை வைகோ நியமிக்கப்பட்டது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல்.. வைகோ மீது பாசம் மாறாத நாஞ்சில் சம்பத்.
தடுப்பூசி போடுவது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பது தொடக்கத்திலிருந்தே தவிர்க்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொண்டோம், கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி சென்று சேர்வதை அரசு உறுதி செய்துள்ளது. தடுப்பூசி திட்டம் தொடங்கியபோது அது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது, ஆனால் அது அனைத்திற்கும் இப்போது விடை கிடைத்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.